
3 மாதங்களுக்கான எரிபொருள் மானிய யோசனை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அடுத்த மூன்று மாதங்களுக்கு நாட்டு மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த எரிபொருள் மானியத் திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிவாரணத் தொகுதிக்காக அரசு தரப்பில் 4,100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்காக இந்த எரிபொருள் மானியம் மக்களுக்குக் கிடைக்கப்பெறும்.
அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இம்மாநியத்தை வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் தகுதி வாய்ந்த பிரிவினர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை கடற்படை அதிரடி: கடலில் காணாமல் போன 4 குடாவெல்லை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று காணால் போயிருந்த குடாவெல்லைவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!
இலங்கையின் தெதுரு ஓயா (Deduru Oya) பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இணையவழி நிதி மோசடி: கொழும்பு மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது!
இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!
தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


