சுவிஸ்: 7°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நெடுந்தீவு கடலில் அதிரடி: 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

VIGNESWARAN ABIRAMY•4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நெடுந்தீவு கடலில் அதிரடி: 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

நெடுந்தீவு கடலில் அதிரடி: 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயன்படுத்திய விசைப்படகு (டிராலர்) ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகும் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

59.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி – கொழும்பில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

இலங்கையில் 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு!

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் எனப்படும் IT/BPO சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையில் வாகன வருவாய் உரிமம் பெற நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

இலங்கையில் நவம்பர் 1, 2026 முதல் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள எண் எனப்படும் TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm