சுவிஸ்: 16°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கைதான தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளருக்கு சரீரப் பிணை!

VIGNESWARAN ABIRAMY•23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கைதான தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளருக்கு சரீரப் பிணை!

கைதான தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளருக்கு சரீரப் பிணை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மாத்தறை, கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐந்து பேரைச் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரையும், பொறியியலாளரான அவரது மகனையும் பிரதேச சபை வளாகத்திற்குள் அழைத்துக் பூட்டி வைத்து, உடல் மற்றும் உள ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திஹகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வீதி ஒன்றில் மதில் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தை அடுத்து, சுவரின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி இவ்விருவரையும் பிரதேச சபைக்கு அழைத்தே இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!

மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm