சுவிஸ்: 7°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த 44.5 மில்லியன் ரூபா சொத்துக்கள் முடக்கம்

YOGALINGAM DILAKSHIKA •3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த 44.5 மில்லியன் ரூபா சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த 44.5 மில்லியன் ரூபா சொத்துக்கள் முடக்கம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் போதைப்பொருள் கடத்தல் மூலமாகச் சட்டவிரோதமாகச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.



குறித்த விசாரணையின் போது, போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தில் சந்தேகநபர்களான பெண்ணின் பெயரில் கடுனேரிய பகுதியில் பெண்ணின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள சுமார் 95 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24.8 பேர்ச் காணி மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள சுமார் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான இருமாடி வீடு போன்ற சொத்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


அதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக, சுமார் 44.5 மில்லியன் ரூபாய் மொத்தப் பெறுமதியுடைய குறித்த சொத்துக்களை நேற்று வெள்ளிக்கிழமை (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குப் பயன்பாட்டிலிருந்து முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

59.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி – கொழும்பில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

இலங்கையில் 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு!

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் எனப்படும் IT/BPO சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையில் வாகன வருவாய் உரிமம் பெற நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

இலங்கையில் நவம்பர் 1, 2026 முதல் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள எண் எனப்படும் TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm