சுவிஸ்: 11°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் அரசு இல்லத்திற்கு மாற்றம்? - பொதிகை வளாகம் புனரமைப்பு!

VIGNESWARAN ABIRAMY•23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
முதலமைச்சர் விஜய் அரசு இல்லத்திற்கு மாற்றம்? - பொதிகை வளாகம் புனரமைப்பு!

முதலமைச்சர் விஜய் அரசு இல்லத்திற்கு மாற்றம்? - பொதிகை வளாகம் புனரமைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அரசு இல்லத்திற்கு மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது முதலமைச்சர் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்குப் பயணிக்கும் போது, சுமார் 19 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க வேண்டியுள்ளது. 

இப்போக்குவரத்தின் போது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் தங்குவதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.  

இதனைத் தொடர்ந்து, சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் தொல்காப்பிய பூங்காவுக்கு எதிரே உள்ள 'பொதிகை வளாக' அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வசித்த இந்த இல்லம், தலைமைச் செயலகத்தில் இருந்து வெறும் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  

தற்போது இந்த பொதிகை வளாக இல்லத்தில் தீவிரமான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் அவ்வில்லத்தை நேரில் பார்வையிட்டு இறுதி முடிவு எடுப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் ஒன்று உருவாகியுள்ளது.இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி!

தமிழகத்தையே உலுக்கியுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது 8-ஆவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய 5 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதவாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ செஃப் தாமு மறைவு!

இந்தியச் சமையல் உலகிலும், சின்னத்திரையிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, தனது 72வது வயதில் இன்று காலை காலமானார்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm