சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

தனியார் அலைவரிசைக்கு 10 கோடி ரூபாய்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

VIGNESWARAN ABIRAMY•4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
தனியார் அலைவரிசைக்கு 10 கோடி ரூபாய்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தனியார் அலைவரிசைக்கு 10 கோடி ரூபாய்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை வழங்கியமை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்திய ஒளிபரப்புச் ஒன்றியத்தின் 63 ஆவது மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாடு மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகத் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அரசாங்கம் 10 கோடி ரூபாய் பணத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக 'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் சங்கம்' லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

அதேவேளை, இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்த அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த அலைவரிசைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசாங்கத்தின் பொது வரிப்பணம் அல்லவென்றும், அது சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் நிதி என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்: பிரியந்த பத்பேரிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

புசல்லாவ தொரகல பகுதியில் சோகம்: பெண் வெட்டிக்கொலை; வாலிபர் தூக்கில் சடலமாக மீட்பு!

புசல்லாவ பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆழ்கடலில் பரபரப்பு: போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகு சுற்றிவளைப்பு!

ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

போதைப்பொருள் குற்றங்களில் 208 பொலிஸார் கைது, 1,500 அதிகாரிகள் சஸ்பெண்ட்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடித் தகவல்!

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பொலிஸ் துறைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm