சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

ரசிகர்களுக்கு தீவாளி சர்ப்ரைஸ்: நடிகர் சூர்யாவின் "சீன்" திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு!

VIGNESWARAN ABIRAMY•15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ரசிகர்களுக்கு தீவாளி சர்ப்ரைஸ்: நடிகர் சூர்யாவின் "சீன்" திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு!

ரசிகர்களுக்கு தீவாளி சர்ப்ரைஸ்: நடிகர் சூர்யாவின் "சீன்" திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், 'ஆவேசம்' திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் SCENE திரைப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டைட்டில் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜாகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரில், சூர்யா 'இன்பராஜ்' என்ற வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 

போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளத்தில் வைரலாகி சூர்யா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போஸ்டர் மற்றும் டீஸரில் கம்பீரமான தோற்றத்தில் வரும் சூர்யா, ஆக்சன் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் களமிறங்குகிறார்.இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சுஷின் ஷியாம் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார்.  

திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டர் மற்றும் டீஸர் அப்டேட்டால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

விஜய் சேதுபதியின் வரிகளில் 'இருவர்' ஆல்பம்: நிவாஸ் கே. பிரசன்னா இசையில் வெளியானது பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடலாசிரியராக அவதாரமெடுத்துள்ள 'இருவர்' சுயாதீன ஆல்பம் பாடலின் லிரிக்கல் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நவம்பர் 15 முதல் ஆரம்பம்: கேரள அரசின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வழிநடத்துகிறார் மம்மூட்டி!

கேரள மாநிலத்தில் வீதி விபத்துகளைத் தடுத்து, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய 'சாலை பாதுகாப்பு மிஷன்' தொடக்கம்! திட்டத்தின் பிராண்ட் தூதராகப் பிரபல நடிகர் மம்மூட்டி நியமனம்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராமாயணா பாகம் 1 திரை விமர்சனம்: ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்ட இதிகாசம்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா பாகம் 1' படத்தின் திரை விமர்சனம்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சூர்யாவின் பட வாய்ப்பை மூன்று முறை மறுத்த நஸ்ரியா: நான்காவது முயற்சியில் இணைந்த சுவாரஸ்யம்!

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க நஸ்ரியா முந்தைய வாய்ப்புகளை மறுத்தது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm