ஆயுர்வேத நிலையங்கள், மருந்தகங்களில் போதைப்பொருள் கடத்தல்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

ஆயுர்வேத நிலையங்கள், மருந்தகங்களில் போதைப்பொருள் கடத்தல்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மருந்தகங்கள் என்ற போர்வையில் சிலர் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சட்டவிரோத நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களை அழைத்து அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடி, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும், ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயர்ப்பலகையைப் தொங்கவிட்டுக்கொண்டு தடைசெய்யப்பட்ட போதை ஊக்கமருந்துகளை விற்பனை செய்யும் சம்பவங்களும் இடம்பெறுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வலியுறுத்திய பிரதி அமைச்சர், தராதரங்கள் பார்க்காமல் எவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, முன்னாள் பொலிஸ் மா அதிபராக இருந்தாலும் சரி அல்லது கிராமத்தில் உள்ள சாதாரண நபராக இருந்தாலும் சரி, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின்படி 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கோட்பாடே நாட்டில் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




