
சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 223 வென்ற இங்கிலாந்து ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 223 ஓட்டங்களால் துவம்சம் செய்த இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொரை 2 - 1 என கைப்பற்றியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்தது.
முதல் இரண்டு விக்கெட்கள் 68 ஓட்டங்களுக்குள் வீழந்தன.
டொம் பென்டன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 126 ஓட்டங்களைக் குவித்தார்.
அணித் தலைவர் ஹெரி ப்றூக்குடன் 3ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களை டொம் பென்டன் பகிர்ந்தார்.
ஹெரி ப்றூக் 77 ஓட்டங்களையும் தொடர்ந்து ஜோர்டன் கொக்ஸ் 76 ஓட்டங்களையும் விளாசினர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சச்சிந்து கொலம்பகே 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 29.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மெர்சிடிஸ் வீரரான கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஐபிஎல் ஏலம்: வீரர்களைத் தக்கவைக்க அணிகளுக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்!
வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!
சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சங்கக்காரவுக்கு இனவெறி அச்சுறுத்தல் – ரையன்ஏர் நிறுவன ஊழியரின் அதிரடி கெடுபிடி!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டப்ளின் விமான நிலையத்தில் ரையன்ஏர் (Ryanair) விமான நிறுவன ஊழியர் ஒருவரால் இனவெறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




