முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சங்கக்காரவுக்கு இனவெறி அச்சுறுத்தல் – ரையன்ஏர் நிறுவன ஊழியரின் அதிரடி கெடுபிடி!

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சங்கக்காரவுக்கு இனவெறி அச்சுறுத்தல் – ரையன்ஏர் நிறுவன ஊழியரின் அதிரடி கெடுபிடி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டப்ளின் விமான நிலையத்தில் ரையன்ஏர் (Ryanair) விமான நிறுவன ஊழியர் ஒருவரால் இனவெறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பிரிஸ்டல் திரும்புவதற்காக டப்ளின் விமான நிலையம் சென்றிருந்த சங்கக்காரவிடம், இலங்கை கடவுச்சீட்டின் மின்னணு விசா (e-Visa) சரிபார்ப்பின் போது ரையன்ஏர் ஊழியர் ஒருவர் இனவெறித் தொனியில் பேசியுள்ளார். அத்துடன், அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்கப் போவதில்லை எனவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, விசா ஆவணங்களைச் சமர்ப்பிக்க சங்கக்கார மறுத்ததாக விமான நிறுவனம் குற்றஞ்சாட்டியது. எனினும், ஏற்கனவே அதிகாரிகள் சரிபார்த்த விசாக்களை மீண்டும் பதிவிறக்கக் கோரி அந்த ஊழியர் அவமரியாதையாகவும், இனவெறித் தொனியிலும் நடந்துகொண்டாரே தவிர, தான் ஆவணங்களைச் சமர்ப்பிக்க மறுக்கவில்லை என சங்கக்கார இந்த அபாண்டமான குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!
சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்!
2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




