சுவிஸ்: 11°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள்!

YOGALINGAM DILAKSHIKA •24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள்!

மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக முழுமையாகச் செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் வெற்றிகரமாக மீண்டும் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.



கடந்த 17 ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் முற்றாகச் செயலிழந்திருந்தன.


இதனிடையே, குறித்த திடீர் பழுதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உடனடியாக மின் கட்டமைப்பில் இணைக்கப் போவதில்லை எனவும், சில நாட்களுக்குப் பின்னரே இணைக்கப்படும் எனவும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.


இது போன்ற அவசர நிலைமைகளின் போது பின்பற்றப்படும் வழமையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm