ஜேர்மனி: ரோபோவைப் பயன்படுத்திச் சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை!

ஜேர்மனி: ரோபோவைப் பயன்படுத்திச் சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள கொலோன் நகரில், ரோபோ ஒன்றைப் பயன்படுத்தி 16 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரோபோவைப் பயன்படுத்தி இவ்வாறான குற்றச் செயல் இடம்பெற்றிருப்பது தங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம் என ஜேர்மனிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில், துரித உணவகம் ஒன்றுக்கு அருகிலுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 120 சென்ரிமீற்றர் உயரமுடைய அந்த ரோபோ, வெள்ளை நிற மேலாடை, கறுப்பு நிறக் காற்சட்டை, தங்கச் சங்கிலி, சூரியக் கண்ணாடி மற்றும் போலி மீசை ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அந்த ரோபோ சிறுமியின் பின்பகுதியைத் தொட்டதுடன், பாலியல் ரீதியான அசைவுகளையும் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
அமெரிக்காவில் இந்து கோவில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி- 19 வயது இளைஞர் கைது!
அமெரிக்காவில் இந்து கோயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு இனவெறித் தாக்குதல் முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, துப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான பக்தர்களின் உயிர்கள் தப்பியுள்ளன.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு: 6% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!
உலகின் முன்னணி ஓடிடி (OTT) தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம், செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாகத் தனது ஊழியர்களில் சுமார் 6 சதவீதத்தினரைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் விமானம் நொறுங்கி 6 பேர் உயிரிழந்த சோகம்!
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் இன்று (14) ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




