புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கோர பேருந்து விபத்து: இருவர் பலி; 15 பேர் காயம்!

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கோர பேருந்து விபத்து: இருவர் பலி; 15 பேர் காயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதியுள்ளது. தொடர்ந்து வீதியை விட்டு விலகிச் சென்ற பேருந்து, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பேருந்தின் சாரதி உட்பட 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!
மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!
முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




