சுவிஸ்: 11°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த மழை: புத்தளம், குளியாப்பிட்டிய பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த மழை: புத்தளம், குளியாப்பிட்டிய பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி!

24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த மழை: புத்தளம், குளியாப்பிட்டிய பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றரும், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் 'அர்னாப்' (ARNAB) சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கத்தால் நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, நாளை (27ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைவு: 28 சுகாதாரப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு!

நாடு முழுவதும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm