சுவிஸ்: 10°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைவு: 28 சுகாதாரப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைவு: 28 சுகாதாரப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு!

நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைவு: 28 சுகாதாரப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாடு முழுவதும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1,05,097 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

பதிவான மொத்த நோயாளர்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி மேல் மாகாணத்தில் 54,673 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,053 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 20,384 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மேலும் கண்டி மாவட்டத்தில் 8,378 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 25 நாட்களில் மட்டும் 4,377 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, பொதுமக்கள் தங்கள் சூழலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு கொசுக்கள் பெருகும் இடங்களை ஒழிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, நாளை (27ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த மழை: புத்தளம், குளியாப்பிட்டிய பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm