
இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி கற்றல், தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென்கொரியாவின் ஜியோங்சாங்னம்-டோ (Gyeongsangnam-do) மாகாணம், சாங்சின் (Changshin) பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பிரதான தரப்புகளுக்கு இடையே இந்த கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தென்கொரியாவில் உயர்கல்வியைத் தொடர்வதுடன், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெற்று நீண்டகால வதிவிட உரிமையைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுமாத்தளன் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் உடனடியாகவும் சுயாதீனமாகவும் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




