சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!

VIGNESWARAN ABIRAMY•28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!

ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் உடனடியாகவும் சுயாதீனமாகவும் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (27) விடுக்கப்பட்டுள்ள அறிக்ககையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் உடனடியாகவும் சுயாதீனமாகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அவர், பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோதே உயிரிழந்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி கற்றல், தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புதுமாத்தளன் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm