அதிவேக நெடுஞ்சாலைச் சொத்துக்கள் திருட்டு: பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

அதிவேக நெடுஞ்சாலைச் சொத்துக்கள் திருட்டு: பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்கள் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றிகள், மின் கேபிள்கள், பாதுகாப்பு இரும்பு வேலிகள் மற்றும் மின் கம்பங்களின் பாகங்கள் போன்றவை மர்ம நபர்களால் தொடர்ச்சியாகத் திருடப்பட்டு வருகின்றன.
இந்தத் திருட்டுச் சம்பவங்களால் அதிவேக நெடுஞ்சாலையின் இரவு நேர மின்விளக்கு அமைப்புகள் பாதிக்கப்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பிற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், நெடுஞ்சாலைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை கடற்படை அதிரடி: கடலில் காணாமல் போன 4 குடாவெல்லை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று காணால் போயிருந்த குடாவெல்லைவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!
இலங்கையின் தெதுரு ஓயா (Deduru Oya) பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இணையவழி நிதி மோசடி: கொழும்பு மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது!
இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 'தூதர்களுடன் ஒரு மாலை' கூட்டம்: சுற்றுலா, விவசாயத் துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்!
தென்கிழக்கு ஆசியா நாட்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘தூதர்களுடன் ஒரு மாலை’ என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, (30) அன்று மத்திய மாகாண சபை அரங்கில் நடைபெற்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


