சுவிஸ்: 9°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வீடு கட்டும் சாட்டில் ரூ. 3.87 கோடி சுருட்டிய இருவர் கைது!

VIGNESWARAN ABIRAMY•28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வீடு கட்டும் சாட்டில் ரூ. 3.87 கோடி சுருட்டிய இருவர் கைது!

வீடு கட்டும் சாட்டில் ரூ. 3.87 கோடி சுருட்டிய இருவர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தங்களை நிறுவனப் பணிப்பாளர்களாகக் காண்பித்து, பணத்தைப் பெற்றுக்கொண்டு பகுதியளவில் மட்டுமே வீடுகளைக் கட்டி ஏமாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பூகொட மற்றும் தொம்பே பகுதிகளைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவரும் 19 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

விகாரமாதேவி சத்தியாகிரக தடைக்கு எதிர்ப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றில் கம்மன்பில ரிட் மனு தாக்கல்!

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைச் சவாலுக்குட்படுத்தி, பிவிஹுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கரந்தெனிய PHI கொலை: துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'ஊரகஹ இந்திக'!

கரந்தெனிய பகுதி சுகாதார பரிசோதகர் (PHI) ரொஷான் குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும், 'ஊரகஹ இந்திக' என்றழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய சூத்திரதாரி டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை: குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுக!

முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அழைப்பு விடுத்துள்ளதுடன், அது அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி அடிப்படை மனித உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

பிரஜாசக்தி திட்டம்: கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 324 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

வறுமையை வெல்வோம்; வளமான கிராமங்களை உருவாக்குவோம்; மக்களின் சக்தியால் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தி தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (28) கிளிநொச்சியில் நடைபெற்றது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm