சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது அனைவரது பொறுப்பு: இன்று சர்வதேச சிறுவர் தினம்!

சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது அனைவரது பொறுப்பு: இன்று சர்வதேச சிறுவர் தினம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலகெங்கிலும் உள்ள சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மற்றும் அவர்களின் நலன்களை வலியுறுத்தும் சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும். "சிறுவர்களின் பிரகாசமான எதிர்காலமே நாட்டின் பலம்" என்பதை மையமாகக் கொண்டு, உலக நாடுகளிலும் இலங்கையிலும் இந்நாளை முன்னிட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பதால், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுடன், தரமான கல்வியையும், முறையான பராமரிப்பையும் வழங்குவது சமூகத்தின் தலையாய கடமையாகும். குறிப்பாக, தற்காலத்தில் சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் இணையவழி ஆபத்துகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றியமையாததாக மாறையுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் அரச-அரசசார்பற்ற நிறுவனங்கள் சார்பில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் இன்று நடத்தப்படுகின்றன.
சிறுவர் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், அவர்களின் கவலையற்ற மற்றும் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை உறுதிசெய்யவும் இந்நாளில் ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




