ஒரே நேரத்தில் விலகும் முதன்மை நாயகிகள்? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலுக்கு எண்ட் கார்டு?

ஒரே நேரத்தில் விலகும் முதன்மை நாயகிகள்? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலுக்கு எண்ட் கார்டு? குறித்த பிரத்யேக ஒளிப்படம்
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி மெகா தொடர்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2’ குறித்து அடுத்தடுத்து வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள், சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி மெகா தொடர்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2’ குறித்து அடுத்தடுத்து வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள், சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் 'மீனா' என்ற முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ், விரைவில் தொடங்கவுள்ள விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ் சீசன் 10'-ல் போட்டியாளராகப் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக அவர் தொடரிலிருந்து விலகப்போகிறாரா அல்லது இடைவெளி எடுக்கப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம், இதே தொடரில் 'ராஜி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்த கத்ரீன், நடிகர் கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அவருக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வாய்ப்பு ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தொடரின் இரு முக்கிய பெண் கதாபாத்திரங்களான மீனா மற்றும் ராஜி இருவரும் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு நகர உள்ளதால், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2' தொடரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரச் சின்னத்திரை நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விஜய் தொலைக்காட்சி அல்லது தொடரின் தயாரிப்புக் குழுவிடமிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஆன்மீகக் களத்தில் இறங்கும் ரவி மோகன் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் , தனது அடுத்த திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘சேயோன்’: வெற்றிகரமாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார்.
தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பித்த அந்தக் குரல்....தமிழோடு சிரிக்க வைத்த, தமிழோடு சிந்திக்கவைத்த அந்த வசீகரக் குரல்…இன்று மௌனமாகிவிட்டது.! தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90
‘மண்டாடி’ திரை விமர்சனம்: சீறிப்பாயும் படகுப் போட்டி... வெற்றிக் கரை சேர்ந்தாரா சூரி?
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள விளையாட்டுச் சார்ந்த திரில்லர் திரைப்படம் ‘மண்டாடி’. கடலையும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




