மைத்திரிபால சிறிசேன தேர்தல் அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கு: 6 பிரதிவாதிகள் விடுவிப்பு

மைத்திரிபால சிறிசேன தேர்தல் அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கு: 6 பிரதிவாதிகள் விடுவிப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெலிகந்தையில் அமைந்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது ஆதரவாளர்களைத் தாக்கி, காயப்படுத்தி, கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பிரதிவாதிகளை அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுவிக்குமாறு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி துலானி வீரதுங்க செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெலிகந்தையில் அமைந்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது ஆதரவாளர்களைத் தாக்கி, காயப்படுத்தி, கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பிரதிவாதிகளை அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுவிக்குமாறு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி துலானி வீரதுங்க செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஜனவரி 11 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் பொலன்னறுவை மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோத கூட்டமொன்றின் உறுப்பினர்களாக இருந்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 140,300, 315 மற்றும் 314 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தலா 7 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவ்வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




