பாதுகாப்பு மற்றும் கப்பல் கட்டும் துறையில் புதிய இலக்கு: மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!

பாதுகாப்பு மற்றும் கப்பல் கட்டும் துறையில் புதிய இலக்கு: மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியா உலகின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக உருவாகும் திறன் கொண்டுள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா உலகின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக உருவாகும் திறன் கொண்டுள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் ஜி.ஆர்.எஸ்.இ. மற்றும் யந்திரா இந்தியா நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் அடங்கும்.
கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராஜ்நாத் சிங் கூறினார்.
இதனிடையே, ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீட்டில் கப்பல் கட்டுமான மையத்தையும், யந்திரா இந்தியா 750 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீட்டில் 2 புதிய தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளது.
இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பையும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!
காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!
காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!
போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




