
அனுஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள அனோஜன் சிவராஜாவின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா மாவட்ட தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.மொழிபெயர்ப்பு செயலிகளைப் பயன்படுத்து
வவுனியா கந்தசாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி பஜார் வீதி வழியாக தர்மலிங்கம் வீதியை சென்றடைந்து பின் கொரவப்பத்தான வீதி ஊடாக நகர பள்ளிவாயல் வரை சென்று நிறைவு பெற்று இருந்தது.
இன்றைய மதிய வழிபாட்டை அடுத்து இஸ்லாமியர்கள் குறித்த பேரணியில் இணைந்து கொண்டிருந்ததோடு அனோஜனின் விடுதலையை வலியுறுத்திய பாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதன் போது இந்து, இஸ்லாமிய, பெளத்த மத தலைவர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் சவுதி அரேபிய தூதரகம், இந்திய தூதரகம் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜரிலும் கையொப்பம் இட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




