சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத வெப்பம்: 1864-க்குப் பிறகு மிக மோசமான கோடைகாலம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத வெப்பம்: 1864-க்குப் பிறகு மிக மோசமான கோடைகாலம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத வெப்பம்: 1864-க்குப் பிறகு மிக மோசமான கோடைகாலம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தில் வானிலை அளவீடுகள் மற்றும் தரவுப் பதிவுகள் தொடங்கப்பட்ட 1864-ஆம் ஆண்டிற்குப் பிறகு, நிலவிய நாட்களிலேயே இந்த ஆண்டின் (2026) கோடைகாலம் தான் மிக மோசமான வெப்பமான மற்றும் வறட்சியான கோடையாகப் பதிவாகியுள்ளதாகச் சுவிஸ் தேசிய வானிலை ஆய்வு மையமானMeteoSwiss அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இது, கடந்த 2003-ஆம் ஆண்டு பதிவான வரலாற்று வெப்ப சாதனையை விட 0.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.  

வழக்கம் போல பதிவாகும் சராசரி வெப்பநிலையை விட, இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து முழுவதும் 3.4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் Basel-Binningen பகுதியில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 30 வானிலை ஆய்வு மையங்களில் இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சகட்ட வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளன.வழக்கத்தை விட மழைப்பொழிவு 60 சதவீதத்திற்கும் குறைவாகக் சரிந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து நதிகள், ஏரிகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்றன.  

காலநிலை மாற்றத்தின் தீவிரப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தத் தரவுகள், சுவிட்சர்லாந்தின் இயற்கைச் சூழலியல் மற்றும் குடிநீர் ஆதாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக சிக்குன்குனியா வைரஸ் பரவல்!

சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக உள்ளூரிலேயே சிக்குன்குனியா வைரஸ் பரவியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாகாணத்தில் ஒரே வீதியில் அருகருகே வசிக்கும் நால்வருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரான்ஸ்-மொன்டானா விபத்து நிவாரணம்: சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான முடிவு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ரிசார்ட்டில் நடந்த கோர விபத்தில் காயமடைந்த இத்தாலிய நாட்டவர்களின் மருத்துவச் செலவை சுவிட்சர்லாந்து அரசே முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: சுவிட்சர்லாந்துடனான வர்த்தகப் பதற்றங்கள் தணிய வாய்ப்பு!

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் – ஹாட்-சவோவா பள்ளிகளில் சேவைகள் பாதிப்பு!

பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் காரணமாக, இன்று ஹாட்-சவோவா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm