சுவிஸ்: 9°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

ICCயின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

ஆகாஷ்•2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
ICCயின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

ICCயின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்கியுள்ளது.

 

இதன் தொடக்க வார இறுதியில் வெளிப்பட்ட சிறப்பான ஆட்டத்திறன் காரணமாக ICC மகளிர் டி20 சர்வதேச (T20I) வீராங்கனைகள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த ஆட்டத்தில் ​​25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் குவித்ததோடு 3 ஓவர்களில் 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய இலங்கை அணித் தலைவி சமரி அதபத்து, இந்த வார தரவரிசை முன்னேற்றத்தில் முன்னிலை வகிக்கிறார்.

 

அவரது சிறப்பான ஆட்டத்திறன், ஐசிசி மகளிர் டி20 சர்வதேச துடுப்பாட்ட தரவரிசையில் ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பந்துவீச்சு தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 33 ஆவது இடத்தைப் பிடிக்கவும்,

 

துடுப்பாட்டத்தில் 734, பந்துவீச்சில் 552 மற்றும் சகலதுறை வீரர்கள் பிரிவில் 405 என, மூன்று பிரிவுகளிலும் தனது தொழில் வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த தரவரிசைப் புள்ளிகளை எட்டியதே அவரது முக்கிய சாதனையாகும்.


ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்

அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் பீபா (FIFA) 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவில் பங்குபற்றிவரும் இலங்கை இளையோர் அணியினரை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர் நேரடியாக சந்தித்து தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm