
வினு மங்கட் டிராபியில் சேவக் மகன் அதிரடி – 173 ரன்கள் குவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவக்கின் மகன் ஆர்யவிர் சேவக், வினு மங்கட் டிராபி தொடரில் 173 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில், டெல்லி அணியின் கேப்டனாக விளையாடிய ஆர்யவிர், சண்டிகர் அணிக்கு எதிராக 143 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த ரன்களைக் குவித்தார். இதனால் டெல்லி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.
இருப்பினும், சண்டிகர் அணியின் ரூபேஷ் யாதவ் 167 ரன்கள் விளாசியதால், அந்த அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அறிமுகமான ஆர்யவிர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் 109 ரன்கள் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை
ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




