இன்று பிற்பகல் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் மஞ்சள் எச்சரிக்கை!

இன்று பிற்பகல் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் மஞ்சள் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று (அக்டோபர் 05) பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (அக்டோபர் 06) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் இந்த பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் விசித்திர வைரஸ்!
மாத்தறை - ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
கைதாகாமல் இருக்க முன் பிணை மனுத் தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிரான சிறைத் தண்டனையை அமல்படுத்த அறிவுறுத்தல்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




