
செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் மந்தமான போக்கைக் கண்டித்த ஸ்ரீதரன்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அவலங்கள் மற்றும் செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் உயரிய சபையில் விடயங்களை முன்வைக்கும் பொறுப்பு எமக்கு காணப்படுகிறது. இதுவரைகாலமும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஊடாக 584 மனித எழும்புக்கூடுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுமா ,இல்லையா என்பதை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அறிவிப்புக்களும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுத்தது. இருப்பினும் உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.
சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




