சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

எட்டாவது மாதமாகவும் வருவாய் இலக்கை விஞ்சி இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை!

ஆகாஷ்•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
எட்டாவது மாதமாகவும் வருவாய் இலக்கை விஞ்சி இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை!

எட்டாவது மாதமாகவும் வருவாய் இலக்கை விஞ்சி இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து எட்டாவது மாதமாகவும் தனது மாதாந்த வருவாய் இலக்கை விஞ்சி அபார சாதனை படைத்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து எட்டாவது மாதமாகவும் தனது மாதாந்த வருவாய் இலக்கை விஞ்சி அபார சாதனை படைத்துள்ளது. 


இலங்கை சுங்கத் திணைக்களம் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான மாதாந்த வருவாய் இலக்குகளைத் தொடர்ச்சியாக எட்டி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், ஓகஸ்ட் மாதத்திற்கான வருவாய் இலக்கான 190.3 பில்லியன் ரூபாயை மாதத்தின் இறுதிக்கு முன்னதாகவே கடந்து திணைக்களம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.  


ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, சுங்கத் திணைக்களம் 199.6 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஓகஸ்ட் மாத இறுதியில் இது 200 பில்லியன் ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 2026 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் சுங்கத் திணைக்களத்திற்கு 2,207 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுக்குள்ளேயே சுங்கத் திணைக்களம் 1,832.7 பில்லியன் ரூபாயை ஈட்டி, வருடாந்த இலக்கில் 83 சதவீதத்தைப் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, சுங்க வரி வசூலிப்பில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சோதனைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையே இந்த தொடர் வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி கற்றல், தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புதுமாத்தளன் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm