இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
அண்மைய தரவுகளின்படி , டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதிலுமுள்ள 76 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையின் மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 13,719 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19,945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பில் 18,588 நோயாளர்களும், கண்டியில் 6,786 நோயாளர்களும், மாத்தறையில் 6,082 நோயாளர்களும், களுத்துறையில் 6,059 நோயாளர்களும், காலியில் 5,133 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,981 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத அடிப்படையில் ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.
சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




