சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு!

கயல்•30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்" இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகளாவிய ரீதியில் அதிகாரப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்" இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகளாவிய ரீதியில் அதிகாரப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 


அரச அதிகாரிகளாலோ அல்லது அரச ஆதரவு பெற்ற தரப்பினராலோ ஒரு நபர் கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டு, அவர் இருக்கும் இடம் மறைக்கப்படுவதை 'மனித குலத்திற்கு எதிரான குற்றம்' என ஐ.நா வரையறுத்துள்ளது.  


இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு இதுவரை முறையான நீதியோ அல்லது உண்மையோ வெளிவரவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இன்றைய தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணிகளும் விசேட கவனவீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  


யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியிலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு தந்தை செல்வா கலையரங்கம் வரை சென்றடைந்தது. சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டின் மூலமே தமக்கு நியாயமான நீதி கிடைக்கும் என்பதை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
கயல்

கயல்

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்குத் தென்கொரியாவில் உயர்கல்வி கற்றல், தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புதுமாத்தளன் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm