
கினியாவில் சோகம்: குப்பை மலை சரிந்து விழுந்ததில் 30 பேர் பரிதாப பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கினியாவின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கினியாவின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம் பகுதியில் குப்பைகள் சரிந்து, அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திறந்தவெளி குப்பை கிடங்கை மூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், விபத்து நடந்தபோது பல குடும்பங்கள் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
மீதமுள்ள குடும்பங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!
காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!
காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!
போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




