சுவிஸ்: 9°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 306 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

VIGNESWARAN ABIRAMY•18 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 306 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 306 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணிக்கு 306 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பாடிய சல்மான் ஆஹா அதிகபட்சமாக 107 ஓட்டங்களைக் குவித்தார்.

தற்போது 306 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆயத்தமாகி வருகிறது. இப்போட்டியில் குசல் மெண்டிஸ் இலங்கை அணியையும், ஷஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியையும் வழிநடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை

ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm