சுவிஸ்: 9°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கைக்கு வந்திறங்கிய வியட்ஜெட்டின் முதல் விமானம்: வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரடி சேவை!

குரு•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கைக்கு வந்திறங்கிய வியட்ஜெட்டின் முதல் விமானம்: வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரடி சேவை!

இலங்கைக்கு வந்திறங்கிய வியட்ஜெட்டின் முதல் விமானம்: வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரடி சேவை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வியட்நாமின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ‘வியட்ஜெட் ஏர்’ (Vietjet Air), இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

வியட்நாமின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ‘வியட்ஜெட் ஏர்’ (Vietjet Air), இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

 

இதன் முதல் விமானம் நேற்று இரவு (18) கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

 

அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து 169 பயணிகளுடன் வந்த வியட்ஜெட்டின் முதல் விமானமான VJ-1875, இரவு 9:33 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

 

180 சாதாரண பயணிகள் (economy-class) இருக்கைகளைக் கொண்ட ஏர்பஸ் A320 (Airbus A320) ரக விமானம் மூலம் இந்தச் சேவை இயக்கப்படுகிறது.

 

இந்த விமான ச‍ேவையானது வியட்நாம் மற்றும் தெற்காசியாவுக்கு இடையே ஒரு புதிய இணைப்பை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தையும் எளிதாக்கும்.

 

மூன்றாவது நாடு வழியாகச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதன் மூலம் வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில், அந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று இருவழி விமானச் சேவைகளை அந்த விமான நிறுவனம் இயக்கும். இலங்கைசுற்றுலா

 

வியட்நாமின் முக்கிய பொருளாதார, வணிக மற்றும் விமானப் போக்குவரத்து மையமான ஹோ சி மின் நகரம் வழியாக, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய பகுதிகளில் உள்ள வியட்ஜெட் நிறுவனத்தின் விமானச் சேவை வலையமைப்பில் உள்ள இடங்களுக்கும் இலங்கை பயணிகள் பயணிக்க முடியும்.

 

தெற்காசியாவில் சுற்றுலா மற்றும் வணிக ரீதியாகத் தொடர்ந்து ஈர்ப்பை அதிகரித்து வரும் இலங்கையை வந்தடைய, இந்த புதிய வழித்தடமானது வியட்நாமிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு மிகவும் வசதியான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலையால் இலங்கையில் 12 பேர் உயிரிழப்பு; 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவு!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm