நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்: ரணிலின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி மீது அதிரடித் தாக்குதல்!

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்: ரணிலின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி மீது அதிரடித் தாக்குதல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் தலையிட்டு நிலைமையைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான அதிகாரிக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பதற்கும், கைது செய்வதற்குமான தீவிர விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பொலிஸாரும் முடுக்கிவிட்டுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




