உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கேப் டவுனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2–1 என்ற கணக்கில் தொடரையும் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. இதன் மூலம் 71.43 சதவீதப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நியூசிலாந்து 72.22 சதவீதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 69.23 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகளிடம் வங்கதேசம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 33.33 சதவீதப் புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் நீடிக்கிறது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இலங்கை அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.
அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்
அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் பீபா (FIFA) 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவில் பங்குபற்றிவரும் இலங்கை இளையோர் அணியினரை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர் நேரடியாக சந்தித்து தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.
இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




