சுவிஸ்: 17°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

குறைந்த அழுத்தப் பிரதேசம் விலகுகிறது; மழை தொடரும்

VIGNESWARAN ABIRAMY•23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
குறைந்த அழுத்தப் பிரதேசம் விலகுகிறது; மழை தொடரும்

குறைந்த அழுத்தப் பிரதேசம் விலகுகிறது; மழை தொடரும் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாட்டில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!

மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm