
நடுவானில் குவைத் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பணிப்பெண்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே, இன்று அதிகாலை குவைத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட 'ஜசீரா' விமானத்தில் பயணித்த போது இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் தனது கர்ப்பிணி நிலையை மறைத்துப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், நடுவானில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானப் பணிக்குழாமினரின் உதவியுடன் பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
விமானி வழங்கிய தகவலுக்குமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும் சேயும் மேலதிக சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




