சுவிஸ்: 7°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

36 ஆண்டுகளுக்குப் பின் காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையக் கட்டடப் பணிகள் ஆரம்பம்!

VIGNESWARAN ABIRAMY•25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
36 ஆண்டுகளுக்குப் பின் காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையக் கட்டடப் பணிகள் ஆரம்பம்!

36 ஆண்டுகளுக்குப் பின் காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையக் கட்டடப் பணிகள் ஆரம்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில், 1990-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக, கடந்த 1990-ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபால் நிலையம் அமைந்திருந்த பகுதியில், 32.09 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm