சுவிஸ் போக்குவரத்து நிறுவனமான Kühne+Nagel-ன் பங்கு உரிமையை கைப்பற்றியது அமேசான்!

சுவிஸ் போக்குவரத்து நிறுவனமான Kühne+Nagel-ன் பங்கு உரிமையை கைப்பற்றியது அமேசான்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தின் முன்னணி சரக்கு மற்றும் போக்குவரத்து நிறுவனமான Kühne+Nagelநிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான உரிமையை (Share Option) அமெரிக்காவின் ஈ-காமர்ஸ் நிறுவனமான Amazon பெற்றுள்ளது.
சர்வதேசச் சரக்கு விநியோகம் மற்றும் சப்ளை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் அமேசான் மற்றும் கியூன் + நாகெல் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 7 ஆண்டுகளில் வணிக இலக்குகளின் அடைப்படை அல்லது சேவைகளின் அடிப்படையில், கியூன் + நாகெல் நிறுவனத்தின் பங்குகளின் உரிமையைப் பெற்றுக்கொள்ளும் விருப்பத்தேர்வை (Call Option) அமேசான் பெற்றுள்ளது.
மேலும், அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவான 'அமேசான் வெப் சர்வீசஸ்' (AWS) அமைப்பின் தொழில்நுட்ப உதவியையும் கியூன் + நாகெல் பெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் சுவிஸ் நிறுவனமான கியூன் + நாகெலின் பங்குகளின் மதிப்பு 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய வணிக மற்றும் சரக்கு விநியோகத் துறை அடுத்த கட்டத்திற்கு நகரும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
13-வது ஓய்வூதியத்துக்கு நிதி திரட்ட VAT வரி உயர்வு – நவம்பர் 29-ல் வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் 13-வது அரசு ஓய்வூதியத்துக்கு நிதி திரட்டுவதற்காக மதிப்பு கூட்டு வரியான VAT-ஐ உயர்த்துவது குறித்து நவம்பர் 29-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு
சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகளவில் அதிகரிக்கும் கடன் செலவுகள் – சுவிட்சர்லாந்திலும் தாக்கம்
உலகளவில் கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் – புதிய நடவடிக்கைகள்
சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




