சுவிஸ்: 7°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாளை மறுநாள் வரை பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாளை மறுநாள் வரை பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை!

நாளை மறுநாள் வரை பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஹாரிஸ்பத்துவ மற்றும் பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல பகுதிகளில் நாளை புதன்கிழமை முற்பகல் முதல் 42 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும்.

மெதவெல பழைய மற்றும் புதிய சேவை நீர்த்தேக்கப் பகுதிகள், கல்லெனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேசங்களுக்கும், அவற்றைச் சுற்றியுள்ள பல உட்பிரிவு வீதிகளுக்கும் இந்த நீர்வெட்டுப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நீர் வழங்கல் சபை, குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் நீரைச் சேமித்து, அதனை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm