'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!

'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி முதல் இன்று (31) காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 136 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 5,768 குடும்பங்களைச் சேர்ந்த 21,240 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் 08 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 நபர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், 101 வீடுகளுக்குச் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக அதிகளவானோர் புத்தளம் மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் மாத்தறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 113 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதில் ஒரு முழுமையான வீடுச் சேதமும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: விசாரணை அறிக்கையைப் பெற்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் 'ரெலோ' தலைவர்கள் முக்கிய சந்திப்பு:
30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.
கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


