பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் 'ரெலோ' தலைவர்கள் முக்கிய சந்திப்பு: குறித்த பிரத்யேக ஒளிப்படம்
30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.
இலங்கைசுற்றுலா வழிகாட்டிபிரதான விடயமாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மசோதா (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மசோதா (OCB) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிலும் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ள இருக்கும் அபாயங்களை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை, மற்றும் திட்டமிட்டு பின் போடப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற நிலையிலே இந்த சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்களை ஒடுக்கவும் தனி மனிதர்களை குறி வைத்து வகை தொகை இன்றி கைதுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கும் அபாயத்தை பற்றி சுட்டிக்காட்டப் பட்டது.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: விசாரணை அறிக்கையைப் பெற்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!
சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



