முல்லைத்திவு முறிகண்டி பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்காகக் காடழிப்பு: வனவளத் திணைக்களத்திற்கு எம்.பி ரவிகரன் கேள்வி!

முல்லைத்திவு முறிகண்டி பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்காகக் காடழிப்பு: வனவளத் திணைக்களத்திற்கு எம்.பி ரவிகரன் கேள்வி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர்பிரிவில், முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள அடர்வனப்பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்களை ஏற்படுத்துவதற்காக பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கப்படுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொதுமக்களுக்கும், மக்களின் அபிவிருத்திக்கும் சட்டங்களை முன்னிறுத்தி தடைகளை ஏற்படுத்தும் வனவளத் திணைக்களம் இராணுவக் குடியிருப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பை எவ்வாறு அனுமதித்து எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை இதுவரை அமைக்கப்பட்ட யானைவேலியின் நீளத்தை வெளிப்படுத்துவதை விட, யானையானையால் ஏற்படும் உயிரிழப்புகளையும், சேதங்களையும் குறைப்பதே நடவடிக்கையின் வெற்றியை வெளிப்படுத்துமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது தொடர்பில் புதன்கிழமை (04) பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்: பிரியந்த பத்பேரிய அறிவிப்பு!
அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.
புசல்லாவ தொரகல பகுதியில் சோகம்: பெண் வெட்டிக்கொலை; வாலிபர் தூக்கில் சடலமாக மீட்பு!
புசல்லாவ பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்கடலில் பரபரப்பு: போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகு சுற்றிவளைப்பு!
ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




