மட்டக்களப்பு மாவட்ட SLPP புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட SLPP புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகச் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவித்த புதிய அமைப்பாளர், மட்டக்களப்பு–கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீதிப் புனரமைப்புப் பணிகள் தரமற்ற முறையில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டினார்.
மழைக்காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைத் தவிர்க்க, உறுதியான உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி உள்ள பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே தனது முதன்மை இலக்கு என்றும் தெய்வேந்திரராசா புலேந்திரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!
மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!
முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




