சுவிஸ்: 7°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவை

ஆகாஷ்•17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவை

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

 

இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) நேற்று (16) இரவு வந்தடைந்தது.

 

அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து VN-671 என்ற விமானமாக இயக்கப்பட்ட ஏர்பஸ் A320 விமானம், நேற்று இரவு 11.02 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.

 

இதன்போது, விமானத்துக்கு இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்திருந்த நீர்பீரங்கி மரியாதையுடன் தொடக்க விமானம் வரவேற்கப்பட்டது. இலங்கைபயணம்

 

அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

குறித்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் வந்திறங்கினர்.

 

அதேவேளையில், இலங்கையிலிருந்து திரும்பும் விமானத்தில் 172 பயணிகள் வியட்நாமுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

 

புதிய நேரடிச் சேவையின் கீழ், கட்டுநாயக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் – இயக்கப்படும்.

 

ஒவ்வொரு விமானப் பயணமும் ஏறக்குறைய நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

 

இந்த புதிய சேவையைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

 

இலங்கைக்கான வியட்நாமியத் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சவூதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நேரில் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm