சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இறுதி தண்டனை விபரங்கள்

EDITOR •22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இறுதி தண்டனை விபரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இறுதி தண்டனை விபரங்கள் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றவாளிகளான 15 பேருக்கும் 220 வருட கடூழிய சிறைத்தண்டனை - மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (22) அறிவித்துள்ளது.

 

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாத கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

269 பேர் உயிரிழந்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தன.

 

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்:


  1. மொஹம்மது நௌஃபர் மௌலவி
  2. மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)
  3. ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்
  4. மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
  5. மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்
  6. மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்
  7. மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்
  8. அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்
  9. மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
  10. அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி
  11. ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர்
  12. மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
  13. மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்
  14. ராசிக் ரசா ஹுசைன்
  15. கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித்
  16.  

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 பேர்:


  1. மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன்
  2. மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப்
  3. ரஷீட் மொஹமட் இப்ராஹிம்
  4. செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம்
  5. மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான்
  6. மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி
  7. மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா
  8. மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி (ஹில்மி)
  9. மொஹமட் அக்ரம் அஹ்கம்
  10.  

வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
EDITOR

EDITOR

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்: பிரியந்த பத்பேரிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய தெரிவித்தார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

புசல்லாவ தொரகல பகுதியில் சோகம்: பெண் வெட்டிக்கொலை; வாலிபர் தூக்கில் சடலமாக மீட்பு!

புசல்லாவ பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆழ்கடலில் பரபரப்பு: போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகு சுற்றிவளைப்பு!

ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

போதைப்பொருள் குற்றங்களில் 208 பொலிஸார் கைது, 1,500 அதிகாரிகள் சஸ்பெண்ட்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடித் தகவல்!

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பொலிஸ் துறைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm