அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு GMOA கடும் எதிர்ப்பு: போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு GMOA கடும் எதிர்ப்பு: போராட்டத்திற்கு அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகி வரும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து தீவிர ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பண்டார வரகாகொட தெரிவிக்கையில்,
முந்தைய அரசாங்கங்களின் காலத்திலும் இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்த தரப்பினர், தற்போது அவற்றை விட கடுமையான சட்டங்களை கொண்டுவருவது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களைத் தடை செய்வதற்கு பரிந்துரைக்கும் அதிகாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வரை கீழ்மட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தொழிற்சங்க உரிமைகளைப் பாரதூரமாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் சோகம்: குளியலறை வாளிக்குள் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி!
மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய திறந்த பிடியாணை!
முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சீரற்ற வானிலை: ஆழ்கடலில் சிக்கிய இலங்கை மீனவர்களுக்கு இந்தியா அவசர அனுமதி!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல் சீற்றம் காரணமாக, ஆழ்கடலில் சிக்கிய இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள் இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




