
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
குறித்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




